கொட்டிக்கிடக்கும் தண்ணீரை கொஞ்சி விளையாடி கிள்ளியள்ளி கூத்தாடி கும்மாளமிடும் வேளையில் கொஞ்சூண்டு நீரெழும்பி குழந்தையுன்னை குளிரூட்டவைத்ததென்ன-நீ கண்மூடி மெய்சிலிர்த்ததென்ன-அதைக் கண்ட நான் கண்ணிமைக்காமல் ரசித்ததென்ன!
தண்ணீரை விலக்கி தடம் பார்த்த மகிழ்ச்சியோடு நின்றுவிடாமல்-முடம் பிடித்த மூடர்கள் இருக்கும்-இடம் தெரியாமல் சென்று வலம் வா..! கலாம் வார்த்தையை காப்பாற்றுவோம் 2020 க்குள்..!!
கண் மூடி நீ ஆடும் நீராடல் கண்டு - அந்த கங்கையே கரை புரண்டு வந்திடும் கண்ணே...... உன்போல் மழலையாய் மீண்டும் நான் மாறிவிட பிரம்மன் என் விதியை மாற்றி விட மாட்டான???
எமன் வந்தாலும்
ReplyDeleteஅவனையும் தன் வசப்படுத்தும்
இந்த மழலைச் சிரிப்பு..!
மாரிமுத்து
9941183802
உன்
ReplyDeleteபுன்னகை கண்டு
போதை கொண்டு
தண்ணீரும் தள்ளாடுதோ..!
மாரிச்சாமி
9489300096
கொட்டிக்கிடக்கும் தண்ணீரை
ReplyDeleteகொஞ்சி விளையாடி
கிள்ளியள்ளி கூத்தாடி
கும்மாளமிடும் வேளையில்
கொஞ்சூண்டு நீரெழும்பி
குழந்தையுன்னை
குளிரூட்டவைத்ததென்ன-நீ
கண்மூடி மெய்சிலிர்த்ததென்ன-அதைக்
கண்ட நான்
கண்ணிமைக்காமல் ரசித்ததென்ன!
உன்னுடன் விளையாட நானும்
ReplyDeleteதுள்ளிக்குதித்துதான் பார்க்கிறேன்
ஆனாலும்
உன் சிரிப்பிற்கு முன்னால்
மீண்டும் மீண்டும்
நான் அடிமையாகிறேன்
- தண்ணீர்
சில நிமிடங்கள் கவலைகளை
ReplyDeleteமறந்திருந்தேன்
அப்பொழுது
நான்
உன் அருகில் தண்ணீராய்
மாறியிருந்தேன்
உன்னுடன் விளையாடி மகிழ
ReplyDeleteதண்ணீருக்கு
கிடைத்த
வரப்பிரசாதம்!
இறைவன் படைத்தவைகளில்
ReplyDeleteமுதலிடம் மழலையின் சிரிப்பே!
உன் சிரிப்பினால்
ReplyDeleteஎன்னை நான் மறந்தேன்? ஆனாலும்..
மறவேன் உன் புன்னகையை!
தண்ணீரும் கூட
ReplyDeleteஆனந்தமாய் துள்ளுகிறது
உன் சிரிப்பைக் கண்டு!
ஒரு நோயை குணப்படுத்த..
ReplyDeleteஆயிரம் செயற்கை (போலி) மருந்துகள்
ஆயிரம் நோயை குணப்படுத்த
ஒரே ஒரு இயற்கை மருந்து
உன் புன்னகை!
அரசியல்வாதி பார்த்திருந்தால்:
ReplyDeleteஇப்படியே பார்த்திருந்தால்
எப்போதுதான் வளர்வது
ஓட்டுப்போட..!
கா.வீரா
9842404632
தனியார் தொலைக்காட்சி பார்த்திருந்தால்:
ReplyDeleteசிறந்த கவிஞருக்கான விருது
இந்தவருடம் உன்
அப்பா அம்மாவுக்கு..!
கா.வீரா
9842404632
கண்ணாடி பார்த்திருந்தால்:
ReplyDeleteகொஞ்சம் ஆறுதல்
நான்பிறந்த பயன்
கிடைத்துவிட்டது
உன் புன்னகையால்..!
கா.வீரா
9842404632
நடன நிகழ்ச்சி நடுவர் பார்த்திருந்தால்:
ReplyDeleteநன்றாகத்தான் சிரிக்கிறாய்
கொஞ்சம் கண்களைத்
திறந்திருக்கலாமே..!
(ஏதாவது குறைசொல்ல வேண்டுமே)
கா.வீரா
9842404632
அரசியல்வாதி பார்த்திருந்தால்:
ReplyDeleteஇப்படியே சிரித்திருந்தால்
எப்போதுதான் வளர்வது
ஓட்டுப்போட..!
கா.வீரா
9842404632
கா.வீராவின் பார்வையில்:
ReplyDeleteஉன்னை உற்றுப்பார்த்தால்
உண்மை புரிகிறது…
உன்னோடு துள்ளிவிளையாடும்
தண்ணீரைக்கூட நீ
விலைகொடுத்து வாங்கியிருபாய் என்று…!
ஆனாலும்
நீ பேசும் முதல்வார்த்தை
`மம்மி`யாக இருக்கவேண்டாம்
அம்மாவாக இருக்கட்டும்..!
(((கவிதை உலகுக்கு புதிதாக வந்திருக்கும் எவர்ஸ்டார்
ReplyDeleteஅவர்களை வரவேற்கிறேன்)))
நீ தொட்டதும்
ReplyDeleteநீரும் குதித்து
உயருகிறது..!
உன்
அழகான சிரிப்பை
அருகில் வந்துபார்க்க..!
சந்தக்கவி.சூசைப்பாண்டி
9578367410
தண்ணீரை விலக்கி
ReplyDeleteதடம் பார்த்த மகிழ்ச்சியோடு
நின்றுவிடாமல்-முடம்
பிடித்த மூடர்கள் இருக்கும்-இடம்
தெரியாமல் சென்று
வலம் வா..!
கலாம் வார்த்தையை காப்பாற்றுவோம்
2020 க்குள்..!!
சந்தக்கவி.சூசைப்பாண்டி
9578367410
தப்பு தப்பென்று
ReplyDeleteஉன்
பிஞ்சுவிரல்கள் தப்பும்போது
உப்பு நீரும் இனிப்பாகி
போனதென்ற
மகிழ்ச்சியா? உனக்கு!
சந்தக்கவி.சூசைப்பாண்டி
9578367410
நீ தட்டும்போது
ReplyDeleteசலசலவென்று
தெறித்த தண்ணீருக்கு
கலகலவென்று
சிரிக்க
கற்றுக்கொடுக்குறாயா?
சந்தக்கவி.சூசைப்பாண்டி
9578367410
நீரை அடித்து
ReplyDeleteநீ சிரிக்கும் சிரிப்பு
உன் அறியாமை
ஆனாலும் அருமை
வளரும் காலத்தில்
யாரையும் அடித்து
நீ மகிழ வேண்டாம்
அதுதான் உனக்குப்
பெறுமை
சந்தக்கவி.சூசைப்பாண்டி
9578367410
இந்த வயதை இழந்துவிட்டோமே
ReplyDeleteஏங்குகிறது மனசு
இராமசாமி ரமேஷ்
அளம்பில்.
தண்ணீருக்கு மெத்த மகிழ்ச்சி...
ReplyDeleteஅது,
குழலிசையை...
குளுப்பாட்டி கொண்டிருப்பதால்!
அன்புடன் நான்.
சி.கருணாகரசு.
உ.நா.குடிக்காடு.
சிங்கப்பூர்... +65 83371700
நீராடிமகிழும் நித்திலமே
ReplyDeleteபோராடிக்குளிக்கின்றாய்.
ஊரோடுஉறவெல்லாமுன்
நீராடும்மகிழ்வில்மயங்கிறதே!
என்
ReplyDeleteகண் முன்
காணும்
சந்தோசம் நீ.....
கொஞ்சும் மழலை
ReplyDeleteநீரில் விளையாட
மோட்சம் பெற்றது
தண்ணீர்
அரும்பின் குறும்பு
ReplyDeleteஎவருமே விரும்பும்
தித்திக்கும் அடிக்கரும்பு
அருமை மொட்டின்
ReplyDeleteஆனந்த விளையாட்டு
பிள்ளைக் கனியமுதின்
கள்ளமற்ற தீண்டலில்
துள்ளியாடும் நீர்க்கோலம்
கொள்ளைபோனதென் மனம்
நீர் அடித்து நீர் விலகாது கண்ணே
ReplyDeleteநீ தீண்டி நீர் சிலிர்த்து உனக்கு
நீர்த்துமிகள் சலக் சலக் என்று
நீராஞ்சனமிடுகின்றன
முத்துச் சிரிப்போ அது முல்லை விரிப்போ
ReplyDeleteதத்தும் துளியோ அதைக் கண்டு களிப்போ!
தண்ணீர்க் குடத்தில் பிறக்கிறாய்
ReplyDeleteதண்ணீர்த் துளியில் களிக்கிறாய்
தண்ணீர்த் தெளிப்பில் சிரிக்கிறாய்
தண்ணீரில் மிதக்கும் தாமரையோ நீ!!
காலடியில் தண்ணீர் உன் முகம் காண
ReplyDeleteதன் துளிகளைத் தூது அனுப்புகிறது
கண்ணனைக் காண அன்று யமுனை
தன் அலைக கரத்தை நீட்டி
தரிசனம் கண்ட நினைவில்!
க்ளுக்..க்ளுக்.. சிரிப்பொலி
ReplyDeleteசலக்.. சலக்.. நீரொலி
தலக்..தலக்.. கையொலி
ஜல்..ஜல்.. சலங்கைஒலி
ஜலதரங்கக் கச்சேரி
களைகட்டியாகி விட்டதே!!
Twinkle Twinkle Little Star
ReplyDeleteHow I Wonder What you Do?
Like A Diamond In The Sky
Sit Around The Water Dews.
கண்ணிரண்டும் தாமரையோ
ReplyDeleteகன்னமெங்கும் மின்னும் தண்ணீர்
கள்ளமற்ற வெள்ளைச் சிரிப்பு
கடவுள் த்ந்த தெய்வ ராகம்
பிள்ளையாய் இருந்த்துவிட்டால்
இல்லை ஒரு தொல்லையடா!
கள்ளமற்ற பிள்ளை உள்ளம் நான் கண்டது
ReplyDeleteதுள்ளியாடும் நீர்க்கோலம் நீ போட்டது
வானுலகு கொஞ்சம் சலித்ததென்று
தெய்வம் கொஞ்ச நேரம் வந்து
விளையாடவரும் நேரமிதுவோ!
காவிரி அல்ல இது
ReplyDeleteகட்டுப்பட்டு வறண்டுபோக
முல்லைப் பெரியாறும் அல்ல
முட்டாள்கள் முடக்கிக் கொள்ள
கடலும் அல்ல
கரை மீறி உயிர் குடிக்க
என் உலகின்
எனக்கான நீரிது
சுயநலமி இல்லை நானும்
சுருட்டிக்கொள்ள இதை எனக்கே
வாருங்கள் என் தோழர்களே
வருங்கால வீரர்களே
நனைத்துக் கொள்வோம் நம்மை
தேவை இன்று உலகில்
மனிதனின் “ஈரம்”!
கொஞ்சம் மரபு... (நேரிசை வெண்பா)
ReplyDeleteஆழ நிலத்தில் அடைந்ததுவோ? ஆறாகி
ஆழி கலக்க அலைந்ததுவோ? - தாழ
கறுமேகம் உற்றதுவோ? எந்நோற் றதோஇச்
சிறுகை அளாவிய நீர்?
Nee enai adithapothum un mel kopamillai... unnai muthamida enniye sithari therithen un kannagalil!
ReplyDelete"Entha mazhalaiyidam sikki sithariyathu neer thuligal mattum alla.... En manamum than...."
ReplyDeleteஆயிரம் பூக்களின் அழகு
ReplyDeleteஒரே இடத்தில
உன் உற்சாக சிரிப்பில் .....
வயதின் இயல்பு
ReplyDeleteஎல்லையில்லா ஆனந்தத்தின் அடையாளம்
பார்பவர்களை கவரும்
கவர்ந்தவர்களை ஈர்க்கும்
ஏதுமறியா ஏ கலைவன்
நீரும் இங்கு குதூகலிக்கிறதோ???
ReplyDeleteகொள்ளை கொள்ளும் உன்
கள்ளமில்லாச் சிரிப்பைக் கண்டு!!!
குழந்தை
ReplyDeleteகுதூகலமாய்த்
தண்ணீரில் அடித்துச் சிரிப்பது-
தகப்பன்
தண்ணியடித்துச்
சிரிக்கக்கூடாது என்பதற்காகவோ...!
-செண்பக ஜெகதீசன்...
குளிக்கும் மகிழ்ச்சி குழந்தை உனக்கு
ReplyDeleteதெளித்து மகிழும் தண்ணீர்
அருகி வரும் காலம் வெகு
தொலைவில் இல்லை அதுவரை
தெளித்து சிந்தி விளையாடு
கண் மூடி நீ ஆடும்
ReplyDeleteநீராடல் கண்டு - அந்த
கங்கையே கரை புரண்டு
வந்திடும் கண்ணே......
உன்போல் மழலையாய்
மீண்டும் நான் மாறிவிட
பிரம்மன் என் விதியை
மாற்றி விட மாட்டான???