background img

The New Stuff

குழலோசை - 1

( உங்கள் கவிதைகளை "கருத்துரை" பகுதியில் பதிவு செய்யுங்கள்... )

47 comments: Leave Your Comments

  1. மாரிமுத்துJanuary 12, 2011 at 6:57 AM

    எமன் வந்தாலும்
    அவனையும் தன் வசப்படுத்தும்
    இந்த மழலைச் சிரிப்பு..!


    மாரிமுத்து
    9941183802

    ReplyDelete
  2. மாரிச்சாமிJanuary 12, 2011 at 7:08 AM

    உன்
    புன்னகை கண்டு
    போதை கொண்டு
    தண்ணீரும் தள்ளாடுதோ..!


    மாரிச்சாமி
    9489300096

    ReplyDelete
  3. கொட்டிக்கிடக்கும் தண்ணீரை
    கொஞ்சி விளையாடி
    கிள்ளியள்ளி கூத்தாடி
    கும்மாளமிடும் வேளையில்
    கொஞ்சூண்டு நீரெழும்பி
    குழந்தையுன்னை
    குளிரூட்டவைத்ததென்ன-நீ
    கண்மூடி மெய்சிலிர்த்ததென்ன-அதைக்
    கண்ட நான்
    கண்ணிமைக்காமல் ரசித்ததென்ன!

    ReplyDelete
  4. எவர்ஸ்டார்January 17, 2011 at 7:30 PM

    உன்னுடன் விளையாட நானும்

    துள்ளிக்குதித்துதான் பார்க்கிறேன்
    ஆனாலும்
    உன் சிரிப்பிற்கு முன்னால்
    மீண்டும் மீண்டும்
    நான் அடிமையாகிறேன்
    - தண்ணீர்

    ReplyDelete
  5. எவர்ஸ்டார்January 17, 2011 at 7:31 PM

    சில நிமிடங்கள் கவலைகளை
    மறந்திருந்தேன்
    அப்பொழுது
    நான்
    உன் அருகில் தண்ணீராய்
    மாறியிருந்தேன்

    ReplyDelete
  6. எவர்ஸ்டார்January 17, 2011 at 7:32 PM

    உன்னுடன் விளையாடி மகிழ

    தண்ணீருக்கு
    கிடைத்த
    வரப்பிரசாதம்!

    ReplyDelete
  7. ஃப்ரீடாJanuary 17, 2011 at 7:33 PM

    இறைவன் படைத்தவைகளில்

    முதலிடம் மழலையின் சிரிப்பே!

    ReplyDelete
  8. எவர்ஸ்டார்January 17, 2011 at 7:40 PM

    உன் சிரிப்பினால்
    என்னை நான் மறந்தேன்? ஆனாலும்..
    மறவேன் உன் புன்னகையை!

    ReplyDelete
  9. ஃப்ரீடாJanuary 17, 2011 at 7:46 PM

    தண்ணீரும் கூட
    ஆனந்தமாய் துள்ளுகிறது
    உன் சிரிப்பைக் கண்டு!

    ReplyDelete
  10. எவர்ஸ்டார்January 17, 2011 at 7:55 PM

    ஒரு நோயை குணப்படுத்த..
    ஆயிரம் செயற்கை (போலி) மருந்துகள்


    ஆயிரம் நோயை குணப்படுத்த
    ஒரே ஒரு இயற்கை மருந்து
    உன் புன்னகை!

    ReplyDelete
  11. அரசியல்வாதி பார்த்திருந்தால்:

    இப்படியே பார்த்திருந்தால்
    எப்போதுதான் வளர்வது
    ஓட்டுப்போட..!

    கா.வீரா
    9842404632

    ReplyDelete
  12. தனியார் தொலைக்காட்சி பார்த்திருந்தால்:

    சிறந்த கவிஞருக்கான விருது
    இந்தவருடம் உன்
    அப்பா அம்மாவுக்கு..!

    கா.வீரா
    9842404632

    ReplyDelete
  13. கண்ணாடி பார்த்திருந்தால்:

    கொஞ்சம் ஆறுதல்
    நான்பிறந்த பயன்
    கிடைத்துவிட்டது
    உன் புன்னகையால்..!

    கா.வீரா
    9842404632

    ReplyDelete
  14. நடன நிகழ்ச்சி நடுவர் பார்த்திருந்தால்:

    நன்றாகத்தான் சிரிக்கிறாய்
    கொஞ்சம் கண்களைத்
    திறந்திருக்கலாமே..!
    (ஏதாவது குறைசொல்ல வேண்டுமே)

    கா.வீரா
    9842404632

    ReplyDelete
  15. அரசியல்வாதி பார்த்திருந்தால்:

    இப்படியே சிரித்திருந்தால்
    எப்போதுதான் வளர்வது
    ஓட்டுப்போட..!

    கா.வீரா
    9842404632

    ReplyDelete
  16. கா.வீராவின் பார்வையில்:

    உன்னை உற்றுப்பார்த்தால்
    உண்மை புரிகிறது…

    உன்னோடு துள்ளிவிளையாடும்
    தண்ணீரைக்கூட நீ
    விலைகொடுத்து வாங்கியிருபாய் என்று…!

    ஆனாலும்
    நீ பேசும் முதல்வார்த்தை
    `மம்மி`யாக இருக்கவேண்டாம்
    அம்மாவாக இருக்கட்டும்..!

    ReplyDelete
  17. (((கவிதை உலகுக்கு புதிதாக வந்திருக்கும் எவர்ஸ்டார்
    அவர்களை வரவேற்கிறேன்)))

    ReplyDelete
  18. சந்தக்கவி.சூசைப்பாண்டிJanuary 22, 2011 at 7:18 AM

    நீ தொட்டதும்
    நீரும் குதித்து
    உயருகிறது..!
    உன்
    அழகான சிரிப்பை
    அருகில் வந்துபார்க்க..!

    சந்தக்கவி.சூசைப்பாண்டி
    9578367410

    ReplyDelete
  19. சந்தக்கவி.சூசைப்பாண்டிJanuary 22, 2011 at 7:32 AM

    தண்ணீரை விலக்கி
    தடம் பார்த்த மகிழ்ச்சியோடு
    நின்றுவிடாமல்-முடம்
    பிடித்த மூடர்கள் இருக்கும்-இடம்
    தெரியாமல் சென்று
    வலம் வா..!
    கலாம் வார்த்தையை காப்பாற்றுவோம்
    2020 க்குள்..!!

    சந்தக்கவி.சூசைப்பாண்டி
    9578367410

    ReplyDelete
  20. சந்தக்கவி.சூசைப்பாண்டிJanuary 22, 2011 at 7:38 AM

    தப்பு தப்பென்று
    உன்
    பிஞ்சுவிரல்கள் தப்பும்போது
    உப்பு நீரும் இனிப்பாகி
    போனதென்ற
    மகிழ்ச்சியா? உனக்கு!


    சந்தக்கவி.சூசைப்பாண்டி
    9578367410

    ReplyDelete
  21. சந்தக்கவி.சூசைப்பாண்டிJanuary 22, 2011 at 7:43 AM

    நீ தட்டும்போது
    சலசலவென்று
    தெறித்த தண்ணீருக்கு
    கலகலவென்று
    சிரிக்க
    கற்றுக்கொடுக்குறாயா?


    சந்தக்கவி.சூசைப்பாண்டி
    9578367410

    ReplyDelete
  22. சந்தக்கவி.சூசைப்பாண்டிJanuary 22, 2011 at 7:54 AM

    நீரை அடித்து
    நீ சிரிக்கும் சிரிப்பு
    உன் அறியாமை
    ஆனாலும் அருமை
    வளரும் காலத்தில்
    யாரையும் அடித்து
    நீ மகிழ வேண்டாம்
    அதுதான் உனக்குப்
    பெறுமை

    சந்தக்கவி.சூசைப்பாண்டி
    9578367410

    ReplyDelete
  23. இந்த வயதை இழந்துவிட்டோமே
    ஏங்குகிறது மனசு
    இராமசாமி ரமேஷ்
    அளம்பில்.

    ReplyDelete
  24. தண்ணீருக்கு மெத்த மகிழ்ச்சி...
    அது,
    குழலிசையை...
    குளுப்பாட்டி கொண்டிருப்பதால்!


    அன்புடன் நான்.
    சி.கருணாகரசு.
    உ.நா.குடிக்காடு.
    சிங்கப்பூர்... +65 83371700

    ReplyDelete
  25. நீராடிமகிழும் நித்திலமே
    போராடிக்குளிக்கின்றாய்.
    ஊரோடுஉறவெல்லாமுன்
    நீராடும்மகிழ்வில்மயங்கிறதே!

    ReplyDelete
  26. என்
    கண் முன்
    காணும்
    சந்தோசம் நீ.....

    ReplyDelete
  27. கொஞ்சும் மழலை
    நீரில் விளையாட
    மோட்சம் பெற்றது
    தண்ணீர்

    ReplyDelete
  28. அரும்பின் குறும்பு
    எவருமே விரும்பும்
    தித்திக்கும் அடிக்கரும்பு

    ReplyDelete
  29. அருமை மொட்டின்
    ஆனந்த விளையாட்டு

    பிள்ளைக் கனியமுதின்
    கள்ளமற்ற தீண்டலில்
    துள்ளியாடும் நீர்க்கோலம்
    கொள்ளைபோனதென் மனம்

    ReplyDelete
  30. நீர் அடித்து நீர் விலகாது கண்ணே
    நீ தீண்டி நீர் சிலிர்த்து உனக்கு

    நீர்த்துமிகள் சலக் சலக் என்று
    நீராஞ்சனமிடுகின்றன

    ReplyDelete
  31. முத்துச் சிரிப்போ அது முல்லை விரிப்போ

    தத்தும் துளியோ அதைக் கண்டு களிப்போ!

    ReplyDelete
  32. தண்ணீர்க் குடத்தில் பிறக்கிறாய்
    தண்ணீர்த் துளியில் களிக்கிறாய்
    தண்ணீர்த் தெளிப்பில் சிரிக்கிறாய்
    தண்ணீரில் மிதக்கும் தாமரையோ நீ!!

    ReplyDelete
  33. காலடியில் தண்ணீர் உன் முகம் காண
    தன் துளிகளைத் தூது அனுப்புகிறது

    கண்ணனைக் காண அன்று யமுனை
    தன் அலைக கரத்தை நீட்டி
    தரிசனம் கண்ட நினைவில்!

    ReplyDelete
  34. க்ளுக்..க்ளுக்.. சிரிப்பொலி
    சலக்.. சலக்.. நீரொலி
    தலக்..தலக்.. கையொலி
    ஜல்..ஜல்.. சலங்கைஒலி
    ஜலதரங்கக் கச்சேரி
    களைகட்டியாகி விட்டதே!!

    ReplyDelete
  35. Twinkle Twinkle Little Star
    How I Wonder What you Do?
    Like A Diamond In The Sky
    Sit Around The Water Dews.

    ReplyDelete
  36. கண்ணிரண்டும் தாமரையோ
    கன்னமெங்கும் மின்னும் தண்ணீர்
    கள்ளமற்ற வெள்ளைச் சிரிப்பு
    கடவுள் த்ந்த தெய்வ ராகம்

    பிள்ளையாய் இருந்த்துவிட்டால்
    இல்லை ஒரு தொல்லையடா!

    ReplyDelete
  37. கள்ளமற்ற பிள்ளை உள்ளம் நான் கண்டது
    துள்ளியாடும் நீர்க்கோலம் நீ போட்டது

    வானுலகு கொஞ்சம் சலித்ததென்று
    தெய்வம் கொஞ்ச நேரம் வந்து
    விளையாடவரும் நேரமிதுவோ!

    ReplyDelete
  38. காவிரி அல்ல இது
    கட்டுப்பட்டு வறண்டுபோக

    முல்லைப் பெரியாறும் அல்ல
    முட்டாள்கள் முடக்கிக் கொள்ள

    கடலும் அல்ல
    கரை மீறி உயிர் குடிக்க

    என் உலகின்
    எனக்கான நீரிது

    சுயநலமி இல்லை நானும்
    சுருட்டிக்கொள்ள இதை எனக்கே

    வாருங்கள் என் தோழர்களே
    வருங்கால வீரர்களே

    நனைத்துக் கொள்வோம் நம்மை
    தேவை இன்று உலகில்
    மனிதனின் “ஈரம்”!

    ReplyDelete
  39. கொஞ்சம் மரபு... (நேரிசை வெண்பா)

    ஆழ நிலத்தில் அடைந்ததுவோ? ஆறாகி
    ஆழி கலக்க அலைந்ததுவோ? - தாழ
    கறுமேகம் உற்றதுவோ? எந்நோற் றதோஇச்
    சிறுகை அளாவிய நீர்?

    ReplyDelete
  40. Nee enai adithapothum un mel kopamillai... unnai muthamida enniye sithari therithen un kannagalil!

    ReplyDelete
  41. "Entha mazhalaiyidam sikki sithariyathu neer thuligal mattum alla.... En manamum than...."

    ReplyDelete
  42. ஆயிரம் பூக்களின் அழகு
    ஒரே இடத்தில
    உன் உற்சாக சிரிப்பில் .....

    ReplyDelete
  43. வயதின் இயல்பு
    எல்லையில்லா ஆனந்தத்தின் அடையாளம்
    பார்பவர்களை கவரும்
    கவர்ந்தவர்களை ஈர்க்கும்
    ஏதுமறியா ஏ கலைவன்

    ReplyDelete
  44. நீரும் இங்கு குதூகலிக்கிறதோ???

    கொள்ளை கொள்ளும் உன்

    கள்ளமில்லாச் சிரிப்பைக் கண்டு!!!

    ReplyDelete
  45. -Shenbaga Jagatheesan...November 20, 2011 at 9:19 PM

    குழந்தை
    குதூகலமாய்த்
    தண்ணீரில் அடித்துச் சிரிப்பது-
    தகப்பன்
    தண்ணியடித்துச்
    சிரிக்கக்கூடாது என்பதற்காகவோ...!

    -செண்பக ஜெகதீசன்...

    ReplyDelete
  46. குளிக்கும் மகிழ்ச்சி குழந்தை உனக்கு
    தெளித்து மகிழும் தண்ணீர்
    அருகி வரும் காலம் வெகு
    தொலைவில் இல்லை அதுவரை
    தெளித்து சிந்தி விளையாடு

    ReplyDelete
  47. கண் மூடி நீ ஆடும்
    நீராடல் கண்டு - அந்த
    கங்கையே கரை புரண்டு
    வந்திடும் கண்ணே......
    உன்போல் மழலையாய்
    மீண்டும் நான் மாறிவிட
    பிரம்மன் என் விதியை
    மாற்றி விட மாட்டான???

    ReplyDelete

Popular Posts