நம் பள்ளிக்காலத்து பழகிய ஞாபகங்களை மீட்டிப் பார்க்கிறேன் கடற்கரைகளில் தானே அதிகமாய் நடந்திருக்கிறோம் நண்பனே! உன் தோள்சாய்ந்து நானும் என் மடிசாய்ந்து நீயும் எத்தனை கதை பேசியிருப்போம்? இன்று அத்தனையும் நாம் கடற்கரையில் நடந்து அலைகளால் அழிக்கப்பட்ட கால்தடங்காய் போனதுவே!
போர் என்னும் கொடிய அரக்கன் நம்மை பிரித்துவிட்டானே!
கலங்காதே நண்பா! வெகுவிரைவிலே நானும் உன்னோடு வந்துவிடுவேன் இருவரும் இணைந்து மேலுலகிலாவது சேர்ந்திருப்போம்...
“பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு” என்றார் வள்ளுவனார், பொருளில்லார்க்கு கவியுலகமும் இல்லைதானே, அஃதாவது பாடலின் உள்ளீடாகும் “பொருள்”, அதை நமக்கு அளித்து நல்ல கவிதைகளை எழுத வழிவகுக்கும் கவிஞர்.வைகறைக்கு நாம் என்ன கைம்மாறு செய்வேம்... “நன்றி” என்று மட்டும் சொல்லி வைப்போம், இப்போதைக்கு!
நீ நடக்கும் பாதையில் எத்தனை பேர் நம்மை பின் தொடர்கின்றார்கள் என்பதை விட்டு எத்தனை பேர் நமக்கு முன் சென்றிருக்கிறார்கள் என்று நோக்கி உன் நோக்கம் வெற்றி பெற முன்னேறு..
துன்பத்தில் துவண்ட மனிதனை
ReplyDeleteஇறைவன் தோளில் சுமக்கிறான்..
ஆகவே ஒற்றைக் காலடி மட்டும் அழுத்தமாக !!
நம்
ReplyDeleteபள்ளிக்காலத்து
பழகிய ஞாபகங்களை
மீட்டிப் பார்க்கிறேன்
கடற்கரைகளில் தானே
அதிகமாய் நடந்திருக்கிறோம்
நண்பனே!
உன் தோள்சாய்ந்து நானும்
என் மடிசாய்ந்து நீயும்
எத்தனை கதை பேசியிருப்போம்?
இன்று
அத்தனையும் நாம்
கடற்கரையில் நடந்து
அலைகளால் அழிக்கப்பட்ட
கால்தடங்காய் போனதுவே!
போர் என்னும்
கொடிய அரக்கன்
நம்மை பிரித்துவிட்டானே!
கலங்காதே நண்பா!
வெகுவிரைவிலே நானும்
உன்னோடு வந்துவிடுவேன்
இருவரும் இணைந்து
மேலுலகிலாவது சேர்ந்திருப்போம்...
இராமசாமி ரமேஷ்
அளம்பில்
நம்
ReplyDeleteகாலடித்தடங்களை
புயலெனும்
எதிரிகள் மறைத்தாலும்
கஷ்டமெனும்
கடலலைகள் கலைத்தாலும்
மீண்டும் பதிப்போம்
முயற்சியெனும் காலடித்தடங்களை
தோல்வியுடன் ஒய்ந்துவிடும்
புயலும்... அலையும்...!!!
மாரிமுத்து
www.oruthulithen.blogspot.com
9941183802
சாதிக்கச் செல்லும்
ReplyDeleteஇந்தப் பாதச்சுவடுகள்
வருங்காலத்தில்
பதிவுச்சுவடுகளாக பரிணமிக்கட்டும்..!
மாரிமுத்து
www.oruthulithen.blogspot.com
9941183802
காதல் சுவடுகள்
ReplyDeleteமணலில் மட்டுமல்ல
மனத்திலும் பதித்துச் சென்றாய்
நின்கால் சுவடுகளை...
காண்கையில் எல்லாம்
கருத்தைக் கிளர்கின்றன
கால் சுவடுகளா?
காலச் சுவடுகளா?
மணற் சுவடுகளைக் கலைத்துவிட்டு
மார்தட்டிக் கொள்கிறது காற்று
மனச்சுவடுகள் கலையாமல்
மன்னியதை அறியாது!
ஹைக்கூக்கள்
ReplyDeleteமணலில் நீவைத்த ஒவ்வோரடிக்கும்
பதிந்தது சுவடு
என் மனதில்!
[திணை: நெய்தல்; துறை: கழிபடர் மிகுதி]
கரைத்துக் கொள்வதால்
கரைத்துக் கொல்கிறது
காற்சுவடுகளைக் கடல்...
மருட்பா
ReplyDelete[ஒரு பாதி வெண்பாவும் மறுபாதி ஆசிரியப்பாவும் இயைந்தது]
பார்த்துக் கவர்ந்து பழகிக் கலந்துபின்
பார்க்கா தவள்போல் பிரிந்தாயே – பார்க்கா(து)
இருக்கையில் ஊறும் இரங்கலின் தவிப்பைத்
தணித்திட என்றுதந் தனையோ
மணலிலும் மனத்திலும் பதிந்தகாற் சுவடே!
கால் சுவடுகள்
ReplyDeleteகடவுளாய்ப்பட்டன கண்களுக்குக்
கண்ட பொழுதில்
கானல்என ஐயுற்றேன்
காற்றிலும் கலையாததால்
கண்டுகொண்டேன் மெய்யென்றே,
பாதை தேடிய
பல நாள் தவிப்பின்
பசி தாகத்தையும்
பறந்திடச் செய்தது
பதிந்து கிடந்த சுவடுகள்…
ஆளில்லா வெங்கானம்
ஆவிஆகக் கூட இல்லை துளிநீர்
அசுரக்காற்றின் ஆராவாரமும்
அக்கினிக் கதிரின் அரசாட்சியுமே
சிக்கிக் கொண்டவனுக்கு
சிநேகிதர்கள் இங்கே!
சின்னதாய்த் துளிர்த்துச்
சிறகுகள் விரித்தது
திரும்பிவிடலாம் என்ற
திளைப்பொடு நம்பிக்கை...
எனக்கு முன்னே
எவனோ ஒருவன்
ஏகியுள்ளான் இவ்வழி
என்ற எண்ணமே
ஏற்றியது திடத்தைத்,
திரும்பிவிடலாம் என்ற
திளைப்பில் நம்பிக்கை
சிறகுகள் விரித்திட,
கடவுளாய்ப்பட்டன கண்களுக்குக்
கால் சுவடுகள்!
[கவிதை புரியாதவர்களுக்கு மட்டும்:
கவிதையின் துறை:
பாலைவனத்தில் தொலைந்தவன்
பாதைகண்டதில் சொன்னது]
விமர்சனம்:
ReplyDeleteகாலடித்தடங்களைப் பார்த்தவுடன் நம்பிக்கை ஊற்றெடுக்க, ஊற்றெடுத்தது பாவாகச் சொல்லோவியங்கள் தீட்டி இருக்கின்றனர்
இராமசாமி ரமேஷ், மாரிமுத்து
இருவரும்...
அருமை...
“பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு” என்றார் வள்ளுவனார், பொருளில்லார்க்கு கவியுலகமும் இல்லைதானே, அஃதாவது பாடலின் உள்ளீடாகும் “பொருள்”, அதை நமக்கு அளித்து நல்ல கவிதைகளை எழுத வழிவகுக்கும் கவிஞர்.வைகறைக்கு நாம் என்ன கைம்மாறு செய்வேம்... “நன்றி” என்று மட்டும் சொல்லி வைப்போம், இப்போதைக்கு!
என்றும் நட்புடன்,
விஜய் :-)
http://naanvijay.blogspot.com
99412 46681
புரசை, சென்னை.
பாதை செல்வது எங்கே?
ReplyDeleteநடைப்பயணம் கட்டும் அங்கே.
பயணம் செல்வது எங்கே?
மனம் காட்டும் அங்கே..
Vaanaththu thevathi poomiku vanthalo! Kotti kidakirathe aval patha suvadugal
ReplyDeleteயாரோ நடந்த பாதை தான்
ReplyDeleteஇருந்தும் பின் தொடர்கிறேன்
நடந்தது நீயாக இருப்பாயோ
என்கிற எண்ணத்தில் ......
விட்டுச் சென்ற
ReplyDeleteகாலடித் தடங்களில்
அழுத்தமாக
புதைந்திருக்கும்
உன் நினைவுகள்..
மறைந்து போகும்
என்றறியாயாது
பதித்துச் செல்கிறது
என் உயிர் வரை
காதல் தடத்தினை..
கடற்கரை மணலில்
ReplyDeleteபதியும் காலடிச் சுவடு போன்றது-
மனித வாழ்வு.
அடுத்தடுத்து வரும் அலைகள்
கரையை தழுவிச் செல்லும் போது
நிலை மாறுவது போல்
மனித வாழ்வும் நிலையற்றது......
வாழும் நாளில்
தன்னலம் பேணாது
பொதுநலம் மனதில் கொண்டு
பதித்திடுவோம் நமது சுவடை
உலக ஏட்டினிலே!!!
காதல் சந்நிதியைக்
ReplyDeleteகாணச் செல்லும்
காலடித்தடங்கள்..
கடற்கரை மணலில்
அழிந்துவிடும்..
காதல் இதயத்தில்
அழிவதேயில்லை...!
-செண்பக ஜெகதீசன்...
பாலைவன மணலில்
ReplyDeleteபதிந்த காலடித்தடத்தில்
புதைந்துபோனது
யாருடைய வாழ்க்கை?
அ.இளஞாயிறு 9443761307
வாழ்க்கை எனும் மணலில்
ReplyDeleteபதிந்த கால் தடத்தை
அழித்து விடுமா
சோதனை எனும் சுழல் காற்று
நம்பிக்கை எனும் அணை போட்டு
முன்னெடுத்து செல் வாழ்வு வளமாகும்
விளையாட்டாய்
ReplyDeleteகடலில் கால்
நனைத்துச் சென்றுவிட்டாய்.
மழையாய் மாறி
உனைத் தேடும்
கடலின்
பரிதவிப்பை
நான் மட்டுமே அறிவேன்!
ReplyDeleteநீ நடக்கும் பாதையில்
எத்தனை பேர் நம்மை
பின் தொடர்கின்றார்கள்
என்பதை விட்டு
எத்தனை பேர் நமக்கு
முன் சென்றிருக்கிறார்கள்
என்று நோக்கி
உன் நோக்கம் வெற்றி பெற
முன்னேறு..