காற்றில் மிதந்து வந்து கண் முன் நடனமாடி உன் கவனம் கலைக்கிறேன்...... உள்ளம் துவண்டு விடாது முயற்சிக்கத் தூண்டுகிறேன்...... உன் கைதனில் தஞ்சமடைந்து உன் உள்ளம் குதூகலிக்கச் செய்து முயற்சியின் அருமையை உணர்த்துகிறேன்......... மென்மையாய் வருடிச் சொன்னது ........ மெல்லிறகு ...........
இறகாய் மென்மையாய் மனம்
ReplyDeleteசிறந்தால் காற்றில் இதமாய்
பறந்து நீந்தலாம் இன்பமாய்..
மாறாய் கடின கல்மனமென்றால்
சிறப்பிருக்காதே வாழ்வில்!.
என் விரல்கள்
ReplyDeleteஏந்திக் கொள்ளும்
உன் அன்பின் சிறகை..
உதிர்ந்து போகும்
வாழ்வின்
உதிரா அடையாளமாய்!
- ரிஷபன்
உன்னில் இருந்து உதிர்ந்தாலும்
ReplyDeleteபரவாயில்லை....
சிறகை விரித்து பறக்கின்றாய் !
வானம் வசப்படட்டும்
நான் இந்த கரங்களில்
இருந்துகொண்டு
பண்ணிசைக்கிறேன்!
.....கா.ந.கல்யாணசுந்தரம்.
Iragin menmai
ReplyDeleteIval karangalil..
Idaiveli kuraihirathu,
Itho
Thottidum thoorathilthaan..
Idhayam padapadakkirathu
Pattaamboochiyaaha...!
-Shenbaga jagatheesan...
மென்மையாய்
ReplyDeleteமிதந்தபடி
வாழ்க்கை
உதறிவிட போவதும்
ரசனையுடன் போற்றுவதும்
ஏந்தும்
உள்ளங்கையையும்,
ஏங்கும்
உள்ளங்களையும்
பொறுத்தே...!
காற்றில் மிதந்து வந்து
ReplyDeleteகண் முன் நடனமாடி
உன் கவனம் கலைக்கிறேன்......
உள்ளம் துவண்டு விடாது
முயற்சிக்கத் தூண்டுகிறேன்......
உன் கைதனில் தஞ்சமடைந்து
உன் உள்ளம் குதூகலிக்கச் செய்து
முயற்சியின் அருமையை
உணர்த்துகிறேன்.........
மென்மையாய் வருடிச் சொன்னது ........
மெல்லிறகு ...........
சிலர் வாழ்க்கை வழி முறை
ReplyDeleteகாற்றில் ஆடும் பஞ்சு போல
நற் தரை சேர்வதும்
கிளையில் தங்குவதும்
காட்டுவழியில் சஞ்சலபடுவதும்
இறைவன் கட்டிய திசையில்
நிலாமதி mathinilaa.blogspot.com
காற்றின் கைப்பாவை
ReplyDeleteசிறகைப் பிரிந்த
இறகு !
நினைவலைகளாய்
ReplyDeleteசிறகடித்து உன்னை
வட்டமிட்டுக் கொண்டேயிருப்பேன்
எப்பொழுதும்