ஒற்றைப் பெருவிரலை நம்பிக்கையாய் பற்றியிருக்கும் அஞ்சு பிஞ்சு விரல்கள் ஆதாரமாய் சுற்றிவரும் உலகமாய் ஆயிரம் யானையின் பலம் பெறும் பற்றுதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலமாய் வாழ்வின் வெளிச்சக் கீற்று இன்பமின்னலாய் மழலையின் ஸ்பரிசம்.
கைப்பிடித்து பார்க்கும்போதெல்லாம் சொல்லத்தோன்றுகிறது.... உனது பயணம் நிச்சயம் எனது எல்லைகளைக் கடக்கும்! சாதனைகளின் விளிம்புகளை ஸ்பரிசிக்கும் என்பதில் ஐயம்மில்லை.....உனக்கு அச்சமில்லை....!
பிறந்த பொழுதே பற்றும் என் கை வாழ் நாள் முழுக்க வழி காட்டியாய் திசைகாட்டும் கைபற்றி வலம்வரும் தனிமை இல்லை எனக்கு எல்லாமுமாய் நீ இருக்கையில் உலகமே உன் உருவிலம்மா
உன் ஒற்றை
ReplyDeleteவிரல் ஸ்பரிசம்
போதும்
நான் உறங்க'....
உன்னை சுமந்த
ReplyDeleteஎன் உடல்
இப்போது
உன் விரல்களை
சுமக்கிறது
நேசம் கொண்டு....
வெண்ணிலவில் கட்டில் செய்து,
ReplyDeleteவிண்மீனை பூக்களாக்கி..
மேகங்களை மெத்தையாக்கி,
நான் உறங்க நீ கொடுத்தாய்....
இவையேதும் தேவையில்லை...
உன் மடி போதும் என்றேன்....
புன்னகைத்து எனை
வாரிக்கொண்டாய்...
உன் ஒற்றை விரல்
ஸ்பரிசம் தந்து
விழிமூட வைத்தாய்....
ஒற்றைப் பெருவிரலை நம்பிக்கையாய்
ReplyDeleteபற்றியிருக்கும் அஞ்சு பிஞ்சு விரல்கள்
ஆதாரமாய் சுற்றிவரும் உலகமாய்
ஆயிரம் யானையின் பலம் பெறும்
பற்றுதல் விண்ணுக்கும் மண்ணுக்கும்
பாலமாய் வாழ்வின் வெளிச்சக் கீற்று
இன்பமின்னலாய் மழலையின் ஸ்பரிசம்.
பிஞ்சு விரல் பற்றியது பாசத்தை பகிர்ந்துகொள்ள ஸ்பரிசம் மூலம்
ReplyDeleteபடர்கிறது நேசம்... விரல் இணைப்பின் விந்தையில்
பாசத்தின் பிணைப்புகளாய்...
அன்பின் அணுக்காளாய் !
அம்மா..
ReplyDeleteஉன் பெருவிரல் நுனியில்
என் எதிர்காலத்தின் தூண்..
ஒருகால்ச்ச்
நாளை நான்
பற்றறுக்கலாம்
ஒரு போதும் உன்
பாசத்தை அறுக்க மாட்டேன்..!
இன்று,
என் ஐந்து விரல்களை
உன் ஒரு விரலால் தாங்குகிறாய்..
நாளை,
உன் ஒவ்வொரு கனவினையும்
என் ஐம்புலன்களால் தாங்குவேன்..!!!
கைப்பிடித்து பார்க்கும்போதெல்லாம்
ReplyDeleteசொல்லத்தோன்றுகிறது....
உனது பயணம் நிச்சயம்
எனது எல்லைகளைக் கடக்கும்!
சாதனைகளின் விளிம்புகளை
ஸ்பரிசிக்கும் என்பதில்
ஐயம்மில்லை.....உனக்கு
அச்சமில்லை....!
கா.ந.கல்யாணசுந்தரம்
www.kavithaivaasal.blogpost.com
கட்டைவிரலை விட்டுவிடு..
ReplyDeleteஅன்புச் செல்வமே,
அடுத்த விரலை
அழுத்திப் பிடித்துக்கொள்..
அதைத்தான் கறையாக்கி
அரியணை ஏறப்போகிறார்கள்-
அரசியலார்....!
-செண்பக ஜெகதீசன்...
உன் உயிருள் நான் உதித்தேன்.....
ReplyDeleteஉன்னுள் நான் வாழ்ந்தேன்.........
உன் அன்பின் ஸ்பரிசங்களில்
பாதுகாப்பை உணர்கிறேன்.....
என்றும் உன் -
தூய உள்ளத்து அன்பை
உறுதுணையாய்க் கொண்டு
வலம் வருவேன் உலகினையே-
வெற்றித் திருமகனாய்!!!
- பி.தமிழ் முகில்
பிறந்த பொழுதே பற்றும் என் கை
ReplyDeleteவாழ் நாள் முழுக்க வழி காட்டியாய்
திசைகாட்டும் கைபற்றி வலம்வரும்
தனிமை இல்லை எனக்கு
எல்லாமுமாய் நீ இருக்கையில்
உலகமே உன் உருவிலம்மா
ReplyDeleteஉறங்கும் போதும்
உன் விரல் பற்றும்
என் கரம்..
அன்பின் ஸ்பரிசம்