விதையாய் பூமிதனில் விழுந்து-மண்ணை தன் வேர்களால் இறுகப் பற்றி நிமிர்ந்து நின்று..... ஆதவனின் ஒளி கண்டு முகம் மலர்ந்து..... காற்றின் இசைக்கேற்ப தலையசைத்து ....... பருவத்தே பயனளித்து தன் கடனாற்றும் உன்னதப் பிறவிகள் - தாவரங்கள்!!!
இன்று நாட்டும் செடி நாளைய விருட்சம். நீ இன்று செய்யும் நற்செயல்கள் நாளை உன் சந்ததிக்கு உதவும் மரங்களும் ஒரு கண்டு பிடிப்பு போல நீ பயன்பெறாவிடாலும் சரித்திரம் உன்கதை சொல்லும்
நட்டு வளர்க்கிறான்
ReplyDeleteஒருவன்..
எரித்துக் கரியாக்குகிறான்
இன்னொருவன்-
மனமுடைந்து போகிறது
மரம்...!
-செண்பக ஜெகதீசன்...
விதையாய் பூமிதனில்
ReplyDeleteவிழுந்து-மண்ணை தன்
வேர்களால் இறுகப் பற்றி
நிமிர்ந்து நின்று.....
ஆதவனின் ஒளி கண்டு
முகம் மலர்ந்து.....
காற்றின் இசைக்கேற்ப
தலையசைத்து .......
பருவத்தே பயனளித்து
தன் கடனாற்றும்
உன்னதப் பிறவிகள் - தாவரங்கள்!!!
இன்று நாட்டும் செடி நாளைய விருட்சம்.
ReplyDeleteநீ இன்று செய்யும் நற்செயல்கள்
நாளை உன் சந்ததிக்கு உதவும்
மரங்களும் ஒரு கண்டு பிடிப்பு போல
நீ பயன்பெறாவிடாலும்
சரித்திரம் உன்கதை சொல்லும்
எது என்ன
ReplyDeleteநிரந்தர ஜனனமா..??
இல்லவே இல்லை
மனிதன் சுயநலக்காரன்..!!
வெட்டதானே வளக்கிறான்..
தமிழ்நிலா/0094 750401020
விதைக்குள் இருந்து
ReplyDeleteமண்ணை துளைத்து
கிளைகள் விரித்த
என்னை
துளைக்க
துணிவது
நியாயமா?
உரம் பெற்று இனி
ReplyDeleteவளர்வது
உன் பாடு...
களைஎடுத்தே களைத்தேன்
காத்திருப்பது
உன் நிழலுக்காய் !
ReplyDeleteபல உயிர்களைப்
புதைத்துக் கொண்டுதான்
தன்னை நாட்டுகின்றன
உயிர்ச்செடிகள்..!