background img

The New Stuff

குழலோசை-2



(காலடித்தடங்கள் உங்களுக்குள் பதிக்கும் கவிதைத்தடங்களை "கருத்துரை" பகுதியில் பதிவு செய்யுங்கள்...)

19 comments: Leave Your Comments

  1. துன்பத்தில் துவண்ட மனிதனை
    இறைவன் தோளில் சுமக்கிறான்..

    ஆகவே ஒற்றைக் காலடி மட்டும் அழுத்தமாக !!

    ReplyDelete
  2. நம்
    பள்ளிக்காலத்து
    பழகிய ஞாபகங்களை
    மீட்டிப் பார்க்கிறேன்
    கடற்கரைகளில் தானே
    அதிகமாய் நடந்திருக்கிறோம்
    நண்பனே!
    உன் தோள்சாய்ந்து நானும்
    என் மடிசாய்ந்து நீயும்
    எத்தனை கதை பேசியிருப்போம்?
    இன்று
    அத்தனையும் நாம்
    கடற்கரையில் நடந்து
    அலைகளால் அழிக்கப்பட்ட
    கால்தடங்காய் போனதுவே!

    போர் என்னும்
    கொடிய அரக்கன்
    நம்மை பிரித்துவிட்டானே!

    கலங்காதே நண்பா!
    வெகுவிரைவிலே நானும்
    உன்னோடு வந்துவிடுவேன்
    இருவரும் இணைந்து
    மேலுலகிலாவது சேர்ந்திருப்போம்...

    இராமசாமி ரமேஷ்
    அளம்பில்

    ReplyDelete
  3. நம்
    காலடித்தடங்களை
    புயலெனும்
    எதிரிகள் மறைத்தாலும்
    கஷ்டமெனும்
    கடலலைகள் கலைத்தாலும்
    மீண்டும் பதிப்போம்
    முயற்சியெனும் காலடித்தடங்களை
    தோல்வியுடன் ஒய்ந்துவிடும்
    புயலும்... அலையும்...!!!

    மாரிமுத்து
    www.oruthulithen.blogspot.com
    9941183802

    ReplyDelete
  4. சாதிக்கச் செல்லும்
    இந்தப் பாதச்சுவடுகள்
    வருங்காலத்தில்
    பதிவுச்சுவடுகளாக பரிணமிக்கட்டும்..!

    மாரிமுத்து
    www.oruthulithen.blogspot.com
    9941183802

    ReplyDelete
  5. காதல் சுவடுகள்

    மணலில் மட்டுமல்ல
    மனத்திலும் பதித்துச் சென்றாய்
    நின்கால் சுவடுகளை...

    காண்கையில் எல்லாம்
    கருத்தைக் கிளர்கின்றன
    கால் சுவடுகளா?
    காலச் சுவடுகளா?

    மணற் சுவடுகளைக் கலைத்துவிட்டு
    மார்தட்டிக் கொள்கிறது காற்று
    மனச்சுவடுகள் கலையாமல்
    மன்னியதை அறியாது!

    ReplyDelete
  6. ஹைக்கூக்கள்

    மணலில் நீவைத்த ஒவ்வோரடிக்கும்
    பதிந்தது சுவடு
    என் மனதில்!

    [திணை: நெய்தல்; துறை: கழிபடர் மிகுதி]

    கரைத்துக் கொள்வதால்
    கரைத்துக் கொல்கிறது
    காற்சுவடுகளைக் கடல்...

    ReplyDelete
  7. மருட்பா
    [ஒரு பாதி வெண்பாவும் மறுபாதி ஆசிரியப்பாவும் இயைந்தது]

    பார்த்துக் கவர்ந்து பழகிக் கலந்துபின்
    பார்க்கா தவள்போல் பிரிந்தாயே – பார்க்கா(து)
    இருக்கையில் ஊறும் இரங்கலின் தவிப்பைத்
    தணித்திட என்றுதந் தனையோ
    மணலிலும் மனத்திலும் பதிந்தகாற் சுவடே!

    ReplyDelete
  8. கால் சுவடுகள்
    கடவுளாய்ப்பட்டன கண்களுக்குக்
    கண்ட பொழுதில்
    கானல்என ஐயுற்றேன்
    காற்றிலும் கலையாததால்
    கண்டுகொண்டேன் மெய்யென்றே,

    பாதை தேடிய
    பல நாள் தவிப்பின்
    பசி தாகத்தையும்
    பறந்திடச் செய்தது
    பதிந்து கிடந்த சுவடுகள்…

    ஆளில்லா வெங்கானம்
    ஆவிஆகக் கூட இல்லை துளிநீர்
    அசுரக்காற்றின் ஆராவாரமும்
    அக்கினிக் கதிரின் அரசாட்சியுமே

    சிக்கிக் கொண்டவனுக்கு
    சிநேகிதர்கள் இங்கே!

    சின்னதாய்த் துளிர்த்துச்
    சிறகுகள் விரித்தது
    திரும்பிவிடலாம் என்ற
    திளைப்பொடு நம்பிக்கை...

    எனக்கு முன்னே
    எவனோ ஒருவன்
    ஏகியுள்ளான் இவ்வழி
    என்ற எண்ணமே
    ஏற்றியது திடத்தைத்,

    திரும்பிவிடலாம் என்ற
    திளைப்பில் நம்பிக்கை
    சிறகுகள் விரித்திட,

    கடவுளாய்ப்பட்டன கண்களுக்குக்
    கால் சுவடுகள்!

    [கவிதை புரியாதவர்களுக்கு மட்டும்:

    கவிதையின் துறை:

    பாலைவனத்தில் தொலைந்தவன்
    பாதைகண்டதில் சொன்னது]

    ReplyDelete
  9. விமர்சனம்:
    காலடித்தடங்களைப் பார்த்தவுடன் நம்பிக்கை ஊற்றெடுக்க, ஊற்றெடுத்தது பாவாகச் சொல்லோவியங்கள் தீட்டி இருக்கின்றனர்
    இராமசாமி ரமேஷ், மாரிமுத்து
    இருவரும்...
    அருமை...


    “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு” என்றார் வள்ளுவனார், பொருளில்லார்க்கு கவியுலகமும் இல்லைதானே, அஃதாவது பாடலின் உள்ளீடாகும் “பொருள்”, அதை நமக்கு அளித்து நல்ல கவிதைகளை எழுத வழிவகுக்கும் கவிஞர்.வைகறைக்கு நாம் என்ன கைம்மாறு செய்வேம்... “நன்றி” என்று மட்டும் சொல்லி வைப்போம், இப்போதைக்கு!

    என்றும் நட்புடன்,
    விஜய் :-)

    http://naanvijay.blogspot.com
    99412 46681
    புரசை, சென்னை.

    ReplyDelete
  10. பாதை செல்வது எங்கே?
    நடைப்பயணம் கட்டும் அங்கே.
    பயணம் செல்வது எங்கே?
    மனம் காட்டும் அங்கே..

    ReplyDelete
  11. Vaanaththu thevathi poomiku vanthalo! Kotti kidakirathe aval patha suvadugal

    ReplyDelete
  12. யாரோ நடந்த பாதை தான்
    இருந்தும் பின் தொடர்கிறேன்
    நடந்தது நீயாக இருப்பாயோ
    என்கிற எண்ணத்தில் ......

    ReplyDelete
  13. விட்டுச் சென்ற
    காலடித் தடங்களில்
    அழுத்தமாக
    புதைந்திருக்கும்
    உன் நினைவுகள்..

    மறைந்து போகும்
    என்றறியாயாது
    பதித்துச் செல்கிறது
    என் உயிர் வரை
    காதல் தடத்தினை..

    ReplyDelete
  14. கடற்கரை மணலில்

    பதியும் காலடிச் சுவடு போன்றது-

    மனித வாழ்வு.

    அடுத்தடுத்து வரும் அலைகள்

    கரையை தழுவிச் செல்லும் போது

    நிலை மாறுவது போல்

    மனித வாழ்வும் நிலையற்றது......

    வாழும் நாளில்

    தன்னலம் பேணாது

    பொதுநலம் மனதில் கொண்டு

    பதித்திடுவோம் நமது சுவடை

    உலக ஏட்டினிலே!!!

    ReplyDelete
  15. -Shenbaga Jagatheesan...November 14, 2011 at 10:43 PM

    காதல் சந்நிதியைக்
    காணச் செல்லும்
    காலடித்தடங்கள்..
    கடற்கரை மணலில்
    அழிந்துவிடும்..
    காதல் இதயத்தில்
    அழிவதேயில்லை...!

    -செண்பக ஜெகதீசன்...

    ReplyDelete
  16. பாலைவன மணலில்
    பதிந்த காலடித்தடத்தில்
    புதைந்துபோனது
    யாருடைய வாழ்க்கை?

    அ.இளஞாயிறு 9443761307

    ReplyDelete
  17. வாழ்க்கை எனும் மணலில்
    பதிந்த கால் தடத்தை
    அழித்து விடுமா
    சோதனை எனும் சுழல் காற்று
    நம்பிக்கை எனும் அணை போட்டு
    முன்னெடுத்து செல் வாழ்வு வளமாகும்

    ReplyDelete
  18. விளையாட்டாய்
    கடலில் கால்
    நனைத்துச் சென்றுவிட்டாய்.
    மழையாய் மாறி
    உனைத் தேடும்
    கடலின்
    பரிதவிப்பை
    நான் மட்டுமே அறிவேன்!

    ReplyDelete

  19. நீ நடக்கும் பாதையில்
    எத்தனை பேர் நம்மை
    பின் தொடர்கின்றார்கள்
    என்பதை விட்டு
    எத்தனை பேர் நமக்கு
    முன் சென்றிருக்கிறார்கள்
    என்று நோக்கி
    உன் நோக்கம் வெற்றி பெற‌
    முன்னேறு..

    ReplyDelete

Popular Posts