background img

The New Stuff

குழலோசை-6



( புகைப்படமாய் தோன்றும் ஒளிப்படத்தை  உங்கள் கவிதைகளால் கவிதைவரிப்படமாய் மாற்றி  "கருத்துரை"ப் பகுதியில் பதிவு செய்யுங்கள்! )

13 comments: Leave Your Comments

  1. சின்னப் பெண்ணே
    சித்திரப் பெண்ணே

    வண்ண நிலவாய்
    வந்த வசந்தமே

    புறப்படு பெண்ணே
    புவியசைக்க நீயும்!

    ReplyDelete
  2. நந்தவனச் சோலையில்
    விரிந்து சிரிக்கும்
    மலர்களின் மேல்
    விழுந்து உடையும்
    மழைத்துளியாய் என்
    பால்ய நினைவுகள்!

    வட்டமிட்ட வண்ணத்துப்பூச்சி
    வட்டத்துக்குள் சுருங்கியதாய்
    உணர்கிறேன்! வாழ்க்கையின்
    பரிமாணத்தில்!

    அன்று என்னை
    தீண்டிய அதே
    மழைத்துளி தான்
    இன்றும்!

    துள்ளி விளையாடிய
    நான் தான் விரட்டி
    அனுப்புகிறேன் வீட்டிற்குள்,
    என் குழந்தையை!

    நனைந்தால் சளி பிடிக்குமென்று!

    நிறைந்த நட்புடன்
    அரசன்
    உ. நா. குடிக்காடு

    karaiseraaalai.blogspot.com

    ReplyDelete
  3. -Shenbaga jagatheesan...November 19, 2011 at 10:35 PM

    மழையில் நனைவது
    மனதுக்குப் பிடிக்கும்-
    பிள்ளை மனது..
    மழையில் நனைவது
    மகளுக்கு ஒத்துக்காதே-
    அன்னை மனது..
    மாறாது இந்த
    மழைக்கோலம்...!

    -செண்பக ஜெகதீசன்...

    ReplyDelete
  4. மழைக்கு கறுப்புக்

    குடைதனை

    கொடியாகக் காட்டி

    புறக்கணிப்போர் மத்தியிலே

    இங்கே நடக்கிறது-

    மழைத் தாய்க்கு ....

    நாட்டியாஞ்சலி வரவேற்பு!!!

    மனம் குளிர்ந்த அன்னையவள்

    வந்து விட்டாள்......

    தன் பூமிக் கிள்ளையைத் தேடி!!!

    மகிழ்ந்திருப்போம்-

    அன்னையின் தன்மையில் ........

    என்றும் மறவாதிருப்போம்-

    மழை தரும் மரங்களை

    வளர்க்க வேண்டுமென்பதை !!!
    - பி.தமிழ் முகில்

    ReplyDelete
  5. மாலை நேரம்
    ஆற்றங்கரையோரம்
    என்ன அழகு?
    ஆசையாசையாய்
    முகம் காட்டி
    ஆட நினைத்தாலும்
    வேகவேகமாய்
    வந்து தடுக்கும்
    அலையலையாய்
    வெட்கம்

    அ.இளஞாயிறு / 9443761307

    ReplyDelete
  6. அன்று என்னைவிரட்டிய என் தாய் .
    இன்று உன்னை விரட்டும் நான்
    சளி பிடிக்கும் நனைந்து விடாதே .
    அதனால் வரும் இன்பம் உனக்கு
    துன்பம் எனக்கு வைத்திய செலவு

    ReplyDelete
  7. தூறிக்கொண்டிருப்பது
    மழையே தான்..
    ஓடிக்கொண்டிருப்பது..??
    தண்ணீர் அல்ல... கண்ணீர்..

    நான் நடப்பது என்னவோ
    வீதியில் தான்..
    போய் கொண்டிருப்பது..
    பிறந்தவுடன் எறிந்து சென்ற
    என் தாயை தேடி..


    sanjay தமிழ் நிலா/0094 750401020

    ReplyDelete
  8. தாயின் அன்பைப் போல
    பொழிந்தபடியிருக்கிறது மழை!
    யாருக்குத்தான் நனையப் பிடிக்காது?

    ReplyDelete
  9. மழைக்காடு..
    மழைத்துளிப் பூக்கள்..
    பாதம் தொட்ட இடமெல்லாம்
    சிலிர்க்கச் செய்யும்..
    ஏதென்று சொல்லத் தெரியவில்லை..
    குட்டிப் பெண்ணைத் தொட்ட மழைக்கா..
    அல்லது..
    மழை நீர் தொட்டுப் போகும்
    குட்டிப்பூவிற்கா..
    ஆனந்தம் எங்கே
    சொட்டிக் கொண்டிருக்கிறதென்று..

    ReplyDelete
  10. மழலை போல
    மனம் மகிழ்ந்து
    மழையே உன்னை
    மடியில் ஏந்தி
    தவமிருக்க ஆசை....

    ReplyDelete
  11. பெண்ணே,,
    என் கண்ணே
    மக்கள் எல்லாம்
    என்னை கண்டு
    மறைந்து கொள்ள
    மயில் போல
    சிறகை விரித்து,
    என் மழைநீரை
    பருக வந்தாயோ?

    ReplyDelete
  12. குடை கொண்டு செல்ல
    மறந்த நாட்களில்தான்
    புரிகிறது
    மழையுடன்
    எனக்குண்டான
    சிநேகமும் விரோதமும்!

    ReplyDelete
  13. மழையின் கீதம்
    பருகிடும் இந்த‌
    செம்மை நிறப்பூ..!

    ReplyDelete

Popular Posts